இந்தியாவின் ஜெட் விமானங்களை அதிரடியாக சுட்டுவீழ்த்தியது பாகிஸ்தான்!

0
758

காஷ்மீரில் இந்திய வான்படையின் இரண்டு தாக்குதல் ஜெட் விமானங்களை தாம் சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் நிலத்தில் வீழ்ந்த விமானியைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்குள் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் ஒன்றை அழித்ததாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் கட்டுபாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் மேற்கொண்ட விமானங்களை பாகிஸ்தார் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆஷ்ப் கபூர் இதுதொடர்பில் தகவல் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தான் எல்லைக்குள் வந்த இந்தியாவின் இரண்டு மிக் ரக விமானங்கள் எமது இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் நிலத்தில் வீழ்ந்த ஒரு விமானி கைதுசெய்யப்பட்டுள்ளார்.” என்றார்.

இதேவேளை இந்திய தகவல்களின்படி, இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானின் மூன்று விமானங்கள் இந்திய விமானங்களால் விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here