பாகுபலி 3இல் நடிக்க ஆசை – பிரபல ஹாலிவுட் நடிகர்

0
196

பிரமாண்ட படங்களில் ஒன்றான பாகுபலி இந்தியாவை தாண்டி சீனா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் வசூலைக் குவித்தது.

ஜாக்சன்

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியான செம ஹிட்டான படம் ‘பாகுபலி’. இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்ற பெருமையும் பாகுபலி திரைப்படத்துக்கு உண்டு.

ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையும் படைத்தது.

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நிக் ஃப்யூரியாக நடித்திருக்கும் சாமுவேல் ஜாக்சன், சமீபத்திய பேட்டி ஒன்றில், “ பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறதா?

என்ற கேள்வி எழுப்பப்பட, ஆம், பாகுபலி 3 எடுத்தால் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன் மார்வெல் படத்தில் இளம் வயது நிக் ஃப்யூரியாக நடிப்பில் அபாரம் காட்டியிருக்கும் சாமுவேலின் இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.

அதுமட்டுமின்றி, ட்விட்டரில் பல தெலுங்கு ரசிகர்கள் பாகுபலி படமானது பாலிவுட் படமில்லை, டோலிவுட் படமென்று ட்விட்டுகளை தட்டியும் விட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here