பிரதமர் மோடிக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

0
176

வரும் மக்களவை தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்களித்து, வாக்களிப்பதில் உலக சாதனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதேபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பல பிரபலங்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மோகன்லால், நாகர்ஜூனா, சல்மான் கான், அமீர்கான், ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் மகாதேவன், பி.வி.சிந்து, சாய்னா நேவல், சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தனித்தனியாக டுவீட் மூலம் பிரதமர் வேண்டுகோள் விடுத்த நிலையில் அனைவரும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தருவதாக கூறி வருகின்றனர்.இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது டுவீட்டில் ‘நாம் செய்து காட்டுவோம்’ என்று பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டுவீட் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here