World

தெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்

ஊரடங்கு உத்தரவால் ஒருசிலர் தவிர பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி கருணை காட்டுகின்றனர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காஜல், திஷா ஆகிய சகோதரிகள். நாக்பூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வழங்குகின்றனர்.

‘ஊரடங்கால் அனைத்து உணவங்களும் மூடப்பட்டுள்ளன. ஒரு சில மக்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. எனவே, எங்களால் முடிந்த அளவிற்கு இந்த நாய்களுக்கு உணவு வழங்குகிறோம்’ என சகோதரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close