Cinema

பிஸ்கோத் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கலக்கும் சந்தானம் !

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அடுத்ததாக பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு பிஸ்கோத், என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சந்தானம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது

ரதன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கண்ணனே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காமெடி மற்றும் சமூக கருத்து அடங்கிய இந்த படம் சந்தானத்திற்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே ஆர் கண்ணன் இயக்கத்தில் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இருந்த சந்தானம் தற்போது அவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் வெளியிட்டுள்ளார். 80 களின் ரெட்ரோ லுக்கில் சந்தானம் புல்லட்டை ஓட்டி வருவது மாதிரி அமைக்கப்பட்டு இருக்கும் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close