Life Style

பெண்களுக்கு மச்சம் பற்றிய பலன்கள் !

நெற்றியின் நடுவில் மச்சம்: இவர்கள் அதிகாரமிக்க பதவியில் அமர்வார்கள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். 

நெற்றியில் வலது பக்கம் மச்சம்: வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வார்கள். 

இடது தாடையில் மச்சம்: இவர்கள் பார்ப்பதற்கு வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பார்கள். ஆண்கள் இவர்களைத் துரத்தித் துரத்தித் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவர்களாக இருப்பார்கள். 

வலது தாடையில் மச்சம்: பிறரால் வெறுக்கப்படுவார்கள். 

கண்களில் மச்சம்: இவர்கள் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.. என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கப்படி பணம் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">

 நாக்கில் மச்சம்: நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரசனைகள் அதிகமாக இருக்கும்.

 முதுகில் மச்சம்: கண்களுக்கு தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

இடது தொடையில் மச்சம்: படிப்படியாக கஷ்டப்பட்டு வாழக்கையில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.

 வலது தொடையில் மச்சம்: தற்பெருமையும் அடங்காபிடாரித்தனமும் இருக்கும். இடது முழங்காலில் மச்சம்: பெண்கள், புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். 

தலையில் மச்சம்: தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும்.  வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது. 

மூக்கு மீது மச்சம்: மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும். 

தொப்புல்களுக்கு மேலே மச்சம்: அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள். 

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம்: இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.

 காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம்: வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு  இருக்கும். காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் வலதுபக்கம்: வறுமை வாட்டும். 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close