World

வீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு…ரேஷன் கடையில்….

தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் வழங்குவது குறித்து அறிவித்தது.அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்ரல் 2 ம் தெதி முதல் 15ம் தேதி வரை, தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக சேர்வதை தடுக்கவும், நிவாரணம் வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூட்டத்தில் அலைமோதுவதை தவிர்க்கும் வகையில், வீடு வீடாக சென்று, ‘டோக்கன்’ வழங்க திட்டம்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை. அடுத்ததாக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, நிவாரண தொகை பெறப்படும்.ஒவ்வொரு நாளில், தலா, 100 நபர்களுக்கு மட்டும், கூட்டமில்லாமல், நிவாரணம் வழங்கி முடிக்கப்படும். முன்னதாக, ரேஷன் கடை ஊழியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, வீடு வீடாக ‘டோக்கன்’ வழங்குவர்.அதில், பொருள் வாங்க வரவேண்டிய நாள், நேரம் இருக்கும். அதில் குறிப்பிட்ட நேரத்தில், டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுடன் கடைக்கு வந்தால், விரைவாக பெற்றுக்கொண்டு திரும்பிவிடலாம். தலா, ஆயிரம் ரூபாயுடன் பருப்பு, எண்ணெயுடன் சர்க்கரையும் பார்சலாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close