World

10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. கால அட்டவணை வெளியீடு.. 


அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அளித்த பேட்டி: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு, ஜூன் 15ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 25ம் தேதிவரையில் நடைபெறும். ஊரடங்கு மே 31ம் தேதி முடிவடைகிறது. அடுத்த நாளே தேர்வு நடத்துவது கடினமான விஷயம். எனவே, புது தேர்வு தேதி குறித்து ஆலோசித்தோம்.



  10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டார்:

ஜூன் 15: மொழிப்பாடம்

ஜூன் 17: ஆங்கிலம்

ஜூன் 19: கணிதம்

ஜூன் 20: விருப்ப மொழி

ஜூன் 22: அறிவியல்

ஜூன் 24: சமூக அறிவியல்

ஜூன் 25: தொழில்பாட தேர்வு

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குழந்தைகளை தேர்வு எழுதுவதற்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்குகிறார்கள். மாணவர்களும் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் அச்சம், மற்றொரு பக்கம் தேர்வு அச்சம் என்ற நிலையில் இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போன்ற நிலையில் சிக்கி கொண்டு தவிக்கிறார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close